பட்ஜெட்டில் அறிவிப்பு - ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
இன்று ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். இந்த கல்லூரியில் பல புதிய அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படும்.
அப்துல்கலாம் நினைவாக இந்த கல்லூரி அமைக்கப்படும். இதில் ஏழை மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னையில் ரூ.2000 கோடியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.